ஜனவரி 7 மின்தடை
By DIN | Published On : 07th January 2019 01:30 AM | Last Updated : 07th January 2019 01:30 AM | அ+அ அ- |

ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர், சிவன்மலை
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம், பழையகோட்டை, காடையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது:
பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூர், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.
ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு.
காடையூர் துணை மின் நிலையம்: காடையூர், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூர், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.
சிவன்மலை: காங்கயம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட சிவன்மலை மின் பாதையில் வரதப்பாளையம் அருகில் உயர் மின்னழுத்த மின் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் திங்கள் கிழமை நிறுத்தப்பட உள்ளது.
சிவன்மலை, படியூர், சாவடிப்பாளையம், தம்மரெட்டிபாளையம், நல்லிபாளையம், காரக்காட்டுப்புதூர், கீரனூர், வேலாயுதம்பாளையம், நால்ரோடு, மறவபாளையம், சாவடி, பூமாண்டன்வலசு, பரஞ்சேர்வழி ஆகிய இடங்களில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இத்தகவலை மின் வாரிய காங்கயம் செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.