ஜாக்டோ-ஜியோ சாலை மறியல்:3000 பேர் கைது

திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.


திருப்பூரில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவகம் முன்பு திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
 இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது:
2003 ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 22 ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திங்கள்கிழமை 5 ஆவது நாளாக திருப்பூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனர்.
திமுக, தமாகா உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை திருப்பூர் தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com