சாய ஆலைத் தொட்டியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
By DIN | Published On : 19th July 2019 09:27 AM | Last Updated : 19th July 2019 09:27 AM | அ+அ அ- |

திருப்பூர் மண்ணரைப் பகுதியில் உள்ள சாய ஆலைத் தொட்டியில் தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர் மண்ணரைப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாய ஆலை உள்ளது. இந்த ஆலையில் துணிகளுக்கு சாயமேற்றிய பின்னர் சாயக் கழிவுநீர் அங்குள்ள தொட்டிக்குள் சேகரிக்கப்பட்டு, சுத்தகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தபட்டு வருகிறது.
இந்நிலையில், இங்கு பாய்லரில் எரிக்கக்கூடிய மரத்துண்டுகளை வெட்டும் பணியில் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர், காஞ்சாலி கிராமத்தைச் சேர்ந்த எம்.பிரதீப்குமார் (26) வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அங்குள்ள கழிவுநீர் தொட்டியின் மேல் அவர் அமர்ந்திருந்தபோது எதிர்பாராதவிதமாக தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.