பள்ளிகளில் புலிகள் தின விழா

உடுமலையில் உள்ள பள்ளிகளில் உலக புலிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாட ப்பட்டது.

உடுமலையில் உள்ள பள்ளிகளில் உலக புலிகள் தின விழா திங்கள்கிழமை கொண்டாட ப்பட்டது.
  உடுமலை ஆர்ஜிஎம் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் திருப்பூர் வனக் கோட்டம் சார்பில் உலக புலிகள் தினத்தை ஒட்டி நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஜிவிஜி கலையரங்கில் நடைபெற்றது. ஆனைமலை புலிகள் காப்பக கௌரவ வன உயிரினப் பாதுகாவலர் நந்தினி ரவீந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் திலீப், மாவட்ட வன உதவிப் பாதுகாவலர் கணேஷ்ராம், வனச் சரகர்கள் தனபால் (உடுமலை), முருகேசன் (அமராவதி), வனத் துறையினர் கலந்து கொண்டனர்.
   பள்ளபாளையம் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக புலிகள் தினம் பசுமை நாளாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் மரம், செடி, கொடிகள் போன்று வேடம் அணிந்து வந்தனர். பேச்சுப் போட்டி, விழி ப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட் டது. பள்ளி இயக்குநர் ரங்கசாமி, பள்ளி 
 முதல்வர் ஜீ.ஜீவராஜ் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   பசுமை மாறா இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் உலக புலிகள் தின விழா உடுமலை அரசுப்  பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.  அமைப்பின் செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன்,  சிறப்பு அழைப்பாளரான சுற்றுச்சூழல் பாதுகாப்பு எழுத்தாளர் கோவை சதாசிவம் உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட உதவி வனப் பாதுகாவலர் கணேஷ்ராம்,  தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி, உதவித் தலைமை ஆசிரியர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com