சேவூரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

அவிநாசி அருகே சேவூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில்

அவிநாசி அருகே சேவூர்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
சேவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், வங்கிகள், உணவகங்கள், பனியன் நிறுவனங்கள், விசைத்தறிக்கூடங்கள்,  மளிகைக் கடைகள்,  தேநீர் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கடந்த  ஒரு மாதமாக காவல் துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சிசிடிவி கேமரா வாங்கித் தருவாத கூட்டத்தில் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து சனிக்கிழமை சேவூர் காவல்  நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சேவூர் காவல்  நிலையப் பேருந்து நிறுத்தம், சந்தையப்பாளையம்,  வடக்கு வீதி சந்திப்பு, கைகாட்டி, கோபி சாலை, புளியம்பட்டி சாலை,  அவிநாசி சாலை, ராஜ வீதி நான்கு சாலை சந்திப்பு, கூட்டுறவு வங்கி அருகே நான்குமுனை சந்திப்பு சாலை உள்பட 19 இடங்களில்  சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து சேவூர் போலீஸார் கூறியது: 
கேமரா பொருத்தும் பணி  ஓரிரு நாளில் தொடங்கப்படும். கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளையும் சேவூர் போலீஸ் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும். இந்த கண்காணிப்பு கேமரா மூலம் அதிவேகமாக வரும் வாகனங்கள், சாலை விதிகளை மீறுவோர் கண்டறியப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com