தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சாவு
By DIN | Published On : 09th June 2019 02:58 AM | Last Updated : 09th June 2019 02:58 AM | அ+அ அ- |

திருப்பூர் அருகே திறந்துகிடந்த வீட்டுத் தண்ணீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து 3 வயது சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருப்பூர், மேட்டுப்பாளையம் அருகே ஆறுக்கோம்பை வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், தச்சுத் தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ் (3). இந்நிலையில், சனிக்கிழமை மதியம் வெளியூர் செல்வதற்காக அவர்கள் அனைவரும் தயராகிக் கொண்டிருந்தனர். அப்போது, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சந்தோஷை திடீரென காணவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை. இந்நிலையில், வீட்டிற்குள் திறந்திருந்துகிடந்த தண்ணீர் தொட்டிக்குள் எட்டிப் பார்த்துள்ளனர். சந்தோஷ் தொட்டித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.