முத்தூர் அருகே கரும்புத் தோட்டத்தில் தீ
By DIN | Published On : 14th June 2019 09:44 AM | Last Updated : 14th June 2019 09:44 AM | அ+அ அ- |

முத்தூர் அருகே புதன்கிழமை கரும்புத் தோட்டம் தீப்பிடித்து சேதமடைந்தது.
முத்தூர், மங்கலப்பட்டியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார் (33), விவசாயி. இவர் தனது குதிரைப் பாறைக் காட்டுத் தோட்டத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்டுள்ளார். கரும்பு நன்றாக வளர்ந்து இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் காய்ந்த கரும்புச் சருகுகளில் திடீரென தீப்பிடித்து நாலாபுறமும் வேகமாகப் பரவியது. தோட்டத்தில் இருந்தவர்கள் முயன்றும் தீயை
அணைக்க முடியவில்லை.
சம்பவ இடத்துக்குச் சென்ற காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வேலுசாமி தலைமையிலான தீயணைப்புப் படையினர் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 1.5 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் தீயில் கருகி சேதமடைந்தன.