காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பங்குனி உத்திரம் அன்று பக்தர்கள் விரதம் இருந்தும், காவடி எடுத்தும் முருகன் கோயிலுக்கு செல்வார்கள்.
இதையொட்டி, வியாழக்கிழமை சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்காலப் பூஜை நடைபெற்றது. பின்னர், சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி-தெய்வானை சகிதமாய் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்டு, மலைக் கோயிலை வலம் வந்தார்.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.