"பார்வையற்றோர் எளிதில் வாக்களிக்க முன்னேற்பாடு'
By DIN | Published On : 22nd March 2019 07:35 AM | Last Updated : 22nd March 2019 07:35 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோர் எளிதில் வாக்களிக்கும் வகையில், அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பிரைல் காகித முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வரும் மக்களவைத் தேர்தலில் பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோர் எளிதில் வாக்களிக்க ஏதுவாக பிரைல் காகிதங்களில் வேட்பாளர்கள் பெயர், கட்சி சின்னம், நோட்டா குறித்த விவரம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அகர வரிசையில் அச்சிட்டு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பார்வை குறைபாடு மற்றும் பார்வையற்றோர் எளிதில் வாக்களிக்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...