திருப்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் மக்கள் நீதி மய்யத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேஷ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்தேன். கட்சிக்காக இதுவரையில் ரூ.25 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் என்னை வேட்பாளராக அறிவிக்காததால் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன். புதிதாக வந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்து கட்சி தலைமை தவறாக முடிவெடுக்கிறது. ஆகவே வரும் மக்களவைத் தேர்தலில் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்து வெற்றி பெற வைப்பேன் என்றார்.
இதனிடையே, வெங்கடேஷ் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைமை அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.