முத்தூரில் ரூ.95.91 லட்சத்துக்கு விளை பொருள்கள் விற்பனை
By DIN | Published On : 05th May 2019 03:38 AM | Last Updated : 05th May 2019 03:38 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ. 95.91 லட்சத்துக்கு வேளாண் விளை பொருள்கள் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டன.
இந்த வார ஏலத்துக்கு 81,212 கிலோ எள் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் கருப்பு எள் கிலோ ரூ. 104.89 முதல் ரூ. 132.40 வரை விலை போனது. சராசரி விலை கிலோ ரூ. 129.40. சிவப்பு எள் கிலோ ரூ. 97.19 முதல் ரூ. 126.49 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 111.40. இவற்றின் விற்பனைத் தொகை ரூ.92 லட்சத்து 70 ஆயிரத்து 506.
விற்பனைக் கூடத்துக்கு 28,644 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கிலோ ரூ. 15.15 முதல் ரூ. 25.25 வரை விலை போனது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சத்து 41 ஆயிரத்து 120. மேலும், 1069 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. கிலோ ரூ. 50.15 முதல் ரூ. 90.25 வரை விற்பனையானது. இதன் விற்பனைத் தொகை ரூ. 79,475.
விற்பனைக் கூட மேற்பார்வையாளர் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 95 லட்சத்து 91 ஆயிரத்து 101 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.