பள்ளிக் கல்வியில் பழைய பாடத்திட்டத்தையே அமல்படுத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 09:11 AM | Last Updated : 15th May 2019 09:11 AM | அ+அ அ- |

பள்ளிக் கல்வியில் பழைய பாடத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவையினர் வலியுறுத்தியுள்ளனர்.
அவிநாசி தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை செயற்குழு அவசரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரவையின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இதில் பள்ளிக் கல்வியில் தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தில் 9, 10 ஆம் வகுப்பில் தமிழில் உள்ள இரு பிரிவுகளை ஒரே பாடமாகவும், 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ஏதாவது ஒன்றை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுக்கலாம் போன்ற மாற்றங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் ஏதுவாக பழைய பாடத்திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவை செயலாளர்கள் சுப்பிரமணியம், சாமிநாதன், துணைத் தலைவர்கள் அப்புசாமி, கோபாலகிருஷ்ணன், தமிழக பணிநிறைவு ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் செ.சுப்பிரமணியம், செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.