மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி
By DIN | Published On : 19th May 2019 07:20 AM | Last Updated : 19th May 2019 07:20 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே தேங்காய் களத்தில் விளையாடியபோது மின்சாரம் பாய்ந்து 2 வயது குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது.
காங்கயத்தை அடுத்த தம்மரெட்டிபாளையத்தில் பாலசுப்பிரமணியத்துக்குச் சொந்தமான தேங்காய் களம் உள்ளது. இங்கு ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இதில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த பூமிராஜா (35) தனது குடும்பத்துடன் கடந்த நான்கு மாதங்களாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவரது குழந்தை செல்லபாண்டி (2) சனிக்கிழமை காலை அங்கிருந்த மின் கம்பத்தை பிடித்துள்ளது. அப்போது குழந்தை மீது மின்சாரம் பாய்ந்தது. குழந்தையை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து காங்கயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.