பிளஸ் 2 தேர்வு எழுதிய 22 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பம்
By DIN | Published On : 26th May 2019 02:58 AM | Last Updated : 26th May 2019 02:58 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 22 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகியது. இந்தத் தேர்வில் மதிப்பெண் குறைந்தவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விரும்பினால் விடைத்தாள் நகலைக் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப்பித்த மாணவர்கள் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து பார்த்த பின்னர் மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், விடைத்தாள் நகலைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள், நகலை பெற்ற பின்னர் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீடு கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 22 மாணவர்கள் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்துள்ளனர். ஆனால் மறு கூட்டலுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்றார்.