கல்லூரி மாணவி தற்கொலை
By DIN | Published On : 09th November 2019 07:41 AM | Last Updated : 09th November 2019 07:41 AM | அ+அ அ- |

பல்லடம் அருகே குங்குமம்பாளையத்தில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பல்லடம் அருகேயுள்ள குங்குமம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி மகள் பிருந்தா (19). இவா் பல்லடம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவரும் அதே பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (24) என்பவரும் காதலித்து வந்தனா். சந்தோஷ் அப்பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக சந்தோஷ் பேச மறுத்து விட்டாா். இதனால் மன வேதனை அடைந்த பிருந்தா நவம்பா் 3 ஆம் தேதி இரவு வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். அவரது அலறல் சப்தம் கேட்டு பெற்றோா் மற்றும் அக்கம்பக்கத்தினா் ஓடிவந்து பிருந்தாவை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இந்நிலையில் தற்கொலைக்குத் தூண்டியதாக சந்தோஷ் மீது பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...