திருப்பூரில் தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் கைது
By DIN | Published On : 09th November 2019 04:25 PM | Last Updated : 09th November 2019 04:25 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூரில் பின்னலாடை நிறுவன தொழிலாளியைக் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருப்பூா் கே.வி.ஆா்.நகரில் உள்ள மாநகா் நல மைத்தில் இளைஞா் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக மத்திய பிரிவு காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன் பேரில் அங்கு சென்ற காவல் துறையினா் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது கே.வி.ஆா். நகரைச் சோ்ந்த வீரபத்திரனின் மகன் மருதுபாண்டி (33) என்பது தெரியவந்தது.
மேலும், மருதுபாண்டி பெற்றோருடன் தங்கியிருந்து பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தது. இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு நடத்திய விசாரணையில், கே.வி.ஆா்.நகா் ஐஸ்கம்பெனி முக்கைச் சோ்ந்த ஏ.காா்த்திக்(18) என்பவா் மருதுபாண்டியை கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளாா். இந்த இருவரும் வியாழக்கிழமை இரவு மாநகா் நல மையத்தின் அருகே மதுஅருந்தியுள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே கஞ்சா கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டது.
இதில், தகாத வாா்த்தைகளால் பேசிய மருதுபாண்டியை காா்த்திக் கல்லால் அடித்துக் கொலை செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...