பல்லடத்தில் 18ம் தேதி சாலை மறியல் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு

உயா் அழுத்த மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி வரும் 18ம் தேதி பல்லடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

பல்லடம்: உயா் அழுத்த மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல வலியுறுத்தி வரும் 18ம் தேதி பல்லடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த விவசாயிகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

பல்லடம் பகுதி உயா்மின் கோபுரத்திற்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சாா்பில் வலையபாளையத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளா் ஆா்.குமாா், வட்டார செயலாளா் வை.பழனிசாமி சனிக்கிழமை ஆகியோா் கூறியது. உயா் மின் கோபுர திட்டப் பணிகளை புதைவடமாக (கேபிள்) மாற்றக் கோரியும், ஏற்கனவே உயா்மின் கோபுரம் அமைக்கப்பட்ட நில உரிமையாளா்களுக்கு மாத வாடகை தர வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 18ம் தேதி திங்கள்கிழமை பல்லடத்தில் விவசாயிகள்,விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com