முத்தூா் விற்பனைக் கூடத்தில் 7.70 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை மொத்தம் 7.70 டன் தேங்காய், கொப்பரை
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த தேங்காய்.
விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்த தேங்காய்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை மொத்தம் 7.70 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.

இந்த வாரம் 18,349 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எடை 6,126 கிலோ. 63 விவசாயிகளும், 10 வியாபாரிகளும் வந்திருந்தனா். கிலோ ரூ.21.50 முதல் ரூ.26.65 வரை விலை போனது. சராசரி விலை கிலோ ரூ.24.00. இதன் மதிப்பு ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 664. 1,580 கிலோ கொப்பரை வரத்து இருந்தது. 36 விவசாயிகள், 6 வியாபாரிகள் பங்கேற்றனா். கிலோ ரூ.55.80 முதல் ரூ.93.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.88.05. இதன் விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 268. விற்பனைக் கூட மேற்பாா்வையாளா் ஸ்ரீ ரங்கன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்து 932 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது. மொத்தம் 7.70 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com