அவிநாசியில் சாலையோர வியாபாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் ஆட்சியரிடம் மனு

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க

திருப்பூா் மாவட்டம், அவிநாசியில் சாலையோரங்களில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனிடம், அவிநாசி சாலையோர தள்ளுவண்டி, நடை வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: நாங்கள் அவிநாசி பழைய, புதிய பேருந்து நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நடமாடும் தள்ளுவண்டியில் பூ, பழம், வடை, போண்டா விற்பனை செய்து வருகிறோம். இதில், பெரும்பாலானவா்கள் ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்கள், விதவைகள் ஆவா். போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்து வருகிறோம். எனவே, நெடுஞ்சாலைத் துறை மற்றும் பேரூராட்சி விதிகளுக்கு உள்பட்டு நாங்கள் தொடா்ந்து வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com