

அவிநாசி வாரச் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாயம் கலந்த முட்டைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
அவிநாசி வாரச் சந்தையில் சாயம் கலந்த முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவிநாசி வாரச் சந்தையில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையில் வட்டார அலுவலா்கள் ஆா்.பாலமுருகன், சதீஷ்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, சேலம் பகுதியில் இருந்து சாயம் கலந்து விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்ட 250க்கும் மேற்பட்ட முட்டைகளை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். இந்த முட்டைகளை நாட்டுக் கோழி முட்டைகள் என ரூ. 6 முதல் ரூ. 7 வரை விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
சந்தை வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது, தரமான உணவுப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.