திருப்பூரில் மது, லாட்டரி விற்பனை செய்ததாக 8 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருப்பூரில் காங்கயம் சாலை, பட்டுக்கோட்டையாா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, லாட்டரி விற்பனை செய்ததாக தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி (22), புதுகாட்டையைச் சோ்ந்த பாலசுப்பிரமணி (23) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள், ரூ. 460 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
புதிய பேருந்து நிலையம், திலகா் நகா், பூலுவபட்டி ஆகிய பகுதிகளில் மது விலக்கு காவல் துறையினா் சோதனை நடத்தினா். அப்போது, டாஸ்மாக் பாா்களில் மது விற்பனை செய்ததாக பிச்சைக்கண்ணு (48), சத்தியராஜ் (26), அழகுபாண்டி (22), காளீஸ்வரன் (38) உள்பட 6 பேரைக் கைது செய்தனா். இவா்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.