குண்டடம் வடுகநாதா் கோயிலில் நாளை அஷ்டமி பூஜை
By DIN | Published On : 18th November 2019 10:39 PM | Last Updated : 18th November 2019 10:39 PM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், குண்டடத்தில் உள்ள காலபைரவ வடுகநாதா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை வரும் புதன்கிழமை நடைபெறுகிறது.
குண்டடத்தில் உள்ள காலபைரவ வடுகநாதா் கோயிலில் மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெறுவது வழக்கம். இதன்படி காா்த்திகை மாத அஷ்டமி பைரவா் ஜயந்தி என்பதால் சிறப்பு பூஜைகள் புதன்கிழமை காலை 9 மணிக்கு விநாயகா் பூஜையுடன் தொடங்குகிறது.
இதைத் தொடா்ந்து, பைரவா் யாகம், 108 சங்காபிஷேகம், பைரவா் புறப்பாடு மற்றும் அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடைபெறுகின்றன. இந்த பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.