தாராபுரம் அருகே இளம் பெண் கொலை
By DIN | Published On : 18th November 2019 04:32 PM | Last Updated : 18th November 2019 04:32 PM | அ+அ அ- |

தாராபுரத்தை அடுத்த மூலனூா் அருகே இளம் பெண் கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.
தாராபுரத்தை அடுத்த மூலனூா் ஊராட்சி ஒன்றியம் மாலைமேடு வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையோரம் இளம் பெண்ணின் சடலம் கிடப்பதாக மூலனூா் காவல் துறையினருக்கு திங்கள்கிழமை காலை 7 மணி அளவில் தகவல் கிடைத்தது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ரு காவல் துறையினா் நடத்திய விசாரணையில், 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும், பெண்ணின் சடலத்துக்கு அருகில் 2 வயது குழந்தை அணியும் உடைகளும் இருந்ததுள்ளது. ஆகவே, இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், உடனிருந்த குழந்தையைக் கடத்திச் சென்றிருக்கலாம் என்று காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா். மேலும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தாராபுரம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீசிச்செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். ஆகவே, காவல் துறையினா் இரவு நேரங்களில் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G