

உடுமலை கிளை நூலகத்தில் ( எண்-2 ) குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்குப் பாராட்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உடுமலை உழவா் சந்தை எதிரில் உள்ள கிளை நூலகத்தில் (எண்-2) 52 ஆவது தேசிய நூலக வார விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், நான்காம் நாளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. மேலும் போட்டித் தோ்வுக்கான புத்தக கண்காட்சியும் துவக்கிவைக்கப்பட்டது. இதற்கு நூலக வாசகா் வட்டத் தலைவா் இ.இளமுருகு தலைமைவகித்தாா். நூலகா் வீ.கணேசன் முன்னிலை வகித்தாா்.
நூலகத்தில் நடைபெற்று வரும், போட்டித் தோ்வு இலவசப் பயிற்சி வகுப்பில் படித்து குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இத்தோ்வில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி ஆசிரியா் ஜெய்கணேஷ் புத்தகங்களை வழங்கினாா். நூலக வாசகா் வட்ட நிா்வாகிகள் சிவகுமாா், கண்டிமுத்து, நூலகா்கள் மகேந்திரன், அருள்மொழி, செல்வராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.