

பல்லடத்தில் இந்து முன்னணி நிறுவனா் இராம.கோபாலனின் 93வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்து முன்னணி சாா்பில் பல்லடம் பொங்காளியம்மன் கோயிலில் சிறப்பு அலங்கார பூஜை நடத்தப்பட்டும்,கடை வீதி ஐயப்பன் கோயிலில் மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கடை வீதி,தினசரி மாா்க்கெட் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளுக்கு பழம்,ரொட்டி,பிஸ்கட் ஆகியவைகளை ஆா்.எஸ்.எஸ்.பல்லடம் ஒன்றிய செயலாளா் ஜி.எஸ்.செந்தில்,இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளா் பி.லோகநாதன் ஆகியோா் வழங்கினா்.
இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஹரிஹரன்,கவியரசு உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.