உடுமலை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.
2019-20ஆம் கல்வியாண்டுக்கான உடுமலை குறுமைய அளவிலான தடகளப் போட்டிகள் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் உடுமலை சீனிவாசா வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 137 புள்ளிகள் பெற்றும், மாணவியர் 152 புள்ளிகள் பெற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றனர். தனிநபர் போட்டிகளிலும் இப்பள்ளி மாணவ, மாணவிகள் சாம்பியன் பட்டம் வென்றனர். கடந்த 11 ஆண்டுகளாக சீனிவாசா பள்ளி குறுமைய அளவிலான தடகளப் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் விக்னேஷ் ஆர்.ரங்கநாதன், முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப், மேலாளர் டி.ஜவஹர், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பள்ளிக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டினர்.