செப்டம்பர் 13 இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
By DIN | Published On : 11th September 2019 06:53 AM | Last Updated : 11th September 2019 06:53 AM | அ+அ அ- |

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதில் தனியார் துறையில் வேலையளிக்கும் நபர்கள் பங்கேற்று பயனாளிகளைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே, வேலை தேடும் நபர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு தேவையான காலியிடங்களை நிரப்பிட தங்கள் வருகையை வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரிகள் வரை ஐ.டி.ஐ. டிப்ளமோ படித்தவர்கள், தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
தங்களது பதிவில் குறையிருந்தால் சரிசெய்து கொள்வதுடன், கூடுதல் கல்வியையும் பதிவு செய்துகொள்ளலாம். தகுதியிருந்தால் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.