மடிக்கணினி வழங்கக் கோரி பள்ளியை முற்றுகையிட்ட முன்னாள் மாணவிகள்
By DIN | Published On : 11th September 2019 06:57 AM | Last Updated : 11th September 2019 06:57 AM | அ+அ அ- |

திருப்பூரில் இலவச மடிக்கணினி கேட்டு அரசு பள்ளியை முன்னாள் மாணவிகள், அவர்களது பெற்றோர் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
திருப்பூர், பெரியகடைவீதியில் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 2018-19 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவிகளுக்கு அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லையாம்.
இந்நிலையில் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் தங்களது பெற்றோருடன் பள்ளியை முற்றுகையிட்டனர். அப்போது பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.