வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு
By DIN | Published On : 11th September 2019 06:56 AM | Last Updated : 11th September 2019 06:56 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பணியிட மாற்றத்தைக் கண்டித்து திருப்பூரில் வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் வி.கே. தஹிலராமாணீ. இவர் மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் செவ்வாய்க்கிழமை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.