பல்கலைக்கழக தேர்வு: தங்கப் பதக்கம் வென்ற மகாராணி கல்லூரி மாணவி
By DIN | Published On : 11th September 2019 06:58 AM | Last Updated : 11th September 2019 06:58 AM | அ+அ அ- |

பாரதியார் பல்கலைகத் தேர்வில் தாராபுரம் மகாராணி கலை, அறிவியல் கல்லூரி மாணவி ஆர்.காயத்ரி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மேலும் 5 மாணவிகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
தாராபுரத்தில் உள்ள மகாராணி கலை, அறிவியல் கல்லூரியில் 2016-2019 ஆம் கல்வி ஆண்டுகளில் பயின்ற மாணவிகள் பாரதியார் பல்கலைக்கழக அளவிலான தேர்வில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனர். மாணவி ஆர்.காயத்ரி (எம்.ஏ.ஆங்கிலம்) முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார்.
மாணவிகள் எஸ்.ஹரிப்பிரியா (பி.எஸ்.சி.சி.டி.எஃப்) மூன்றாவது இடத்தையும், எஃப்.சந்தியாசெல்வரசி (பி.ஏ.ஆங்கிலம்), எம்.சஜிதா இசத் (பிசிஏ) ஆகியோர் நான்காவது இடத்தையும், எஸ்.நிசா (பிபிஏ), ஆர்.பிரியாங்கா(பி.எஸ்.சி.கணிதம் சிஏ) ஆகியோர் ஐந்தாவது இடத்தையும் பிடித்தனர்.
தங்கப்பதக்கம், தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.