கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்ட உடுமலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான வீரர்கள் தேர்வு ஈரோடு மாவட்டம், புளியம்பட்டியில் நடைபெற்றது. ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் என மூன்று பிரிவுகளாக அணிகள் தேர்வு நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் உடுமலை வட்டம், பெதப்பம்பட்டியைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.குணசேகரன் (ஜூனியர் பிரிவு), சி.தினேஷ் (சீனியர் பிரிவு), எம்.சுபாஷ் (சூப்பர் சீனியர் பிரிவு) ஆகியோர் மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் அப்துல்காதர், உடற்கல்வி இயக்குநர் ஞா.செந்தில் குமாரவேல், ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினர் மாணவர்களை வாழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.