சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் கைது
By DIN | Published On : 29th September 2019 12:17 AM | Last Updated : 29th September 2019 12:17 AM | அ+அ அ- |

கோவை இந்து முன்னணி பிரமுகர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவரை பல்லடம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கோவை இந்து முன்னணி பிரமுகர் மறைந்த சசிகுமார் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் அறிவொளி நகர் ராஜ்குமார் பல்லடம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளர் ஹாரிஸ்பாபுவை சனிக்கிழமை கைது செய்தனர்.