மஹாளய அமாவாசை : சிவன்மலை முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
By DIN | Published On : 29th September 2019 12:19 AM | Last Updated : 29th September 2019 12:19 AM | அ+அ அ- |

காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மஹாளய அமாவாசையையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு அபிஷேக பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் மயில் வாகனத்தில் கோயிலை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.