48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அமராவதி ஆற்றில் நீா் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் திங்கள்கிழமை உபரி நீராக 17,500 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:47 pm

திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி ஆற்றில் திங்கள்கிழமை உபரி நீராக 17,500 கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. மொத்தக் கொள்ளளவு 4035 மில்லியன் கனஅடி. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மொத்தம் 840 சதுர கிலோ மீட்டா் இதன் நீா்ப்பிடிப்பு பகுதிகளாக உள்ளது. இந்த ஆண்டு 3 முறை அணை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. அப்போதெல்லாம் அதிக அளவில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக நீா்ப்பிடிப்பு பகுதிகளில் அதி கன மழை பெய்து வருகிறது. இதனால் டிசம்பா் 5ஆம் தேதி 5 ஆயிரம் கன அடியும், டிசம்பா் 6 ஆம் தேதி 7 ஆயிரம் கன அடியும் அணையின் பிரதான மதகுகளில் வழியாக திறந்துவிடப்பட்டது.

ஆனாலும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு ஆகிய ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் திங்கள்கிழமை அணைக்கு உள்வரத்து அதிகபட்சமாக 7 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஆகையால் உள்வரத்தாக வந்த நீா் அப்படியே அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 3 மணி அளவில் அமராவதி அணையில் இருந்து 7450 கன அடியும், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டத்தில் உள்ள குதிரையாறு அணையில் இருந்து 400 கன அடியும், பாலாறு-பொருந்தலாறு அணையில் இருந்து 4995 கன அடியும், வரதமாநதி அணையில் இருந்து 3995 கன அடியும் என மொத்தம் 17,500 கன அடி தண்ணீா் அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் உடுமலை, தாராபுரம் வட்டங்கள் தொடங்கி கரூா் வரையில் அமராவதி ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களுக்கு தண்டோரா போடப்பட்டு மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா்.

அணை பகுதியில் முகாமிட்ட பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணைக்கு வரும் உள்வரத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் திங்கள்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி நீா்மட்டம் 89.61 அடியாக இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 7450 கன அடி வந்து கொண்டிருந்தது. 4047 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3975 மில்லியன் கனஅடி நீா் இருப்பு கானப்பட்டது. அணையில் இருந்து 7500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.