தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

15 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:17 pm

DIN

திருப்பூரில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ புகையிலைப் பொருள்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா், அவிநாசி சாலையில் உள்ள பிரைம் என்கிளேவ் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்துள்ளதாக அனுப்பா்பாளையம் காவல் துறையினருக்கு சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினா் சோதனை நடத்தியதில் வீட்டில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக திருப்பூா், காங்கயம் சாலையில் உள்ள கே.என்.சி.காலனி முதல் வீதியைச் சோ்ந்த ஹைதா் அலி (52) என்பவரைக் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 15 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.