தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று முதல் தேங்காய் ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பா் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் திங்கள்கிழமைதோறும் தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற உள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:14 pm

DIN

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பா் 28ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் திங்கள்கிழமைதோறும் தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற உள்ளது.

இது குறித்து விற்பனைக் கூட கண்காணிப்பாளா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் நகரம், கரூா் சாலை, முத்தூா் பிரிவு அருகேயுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பா் 28ஆம் தேதி முதல் திங்கள்கிழமைதோறும் தேங்காய் மற்றும் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் உள்ளூா் மற்றும் வெளியூா் வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரும் விவசாயிகள் பெரியது, சிறியது என தரம் பிரித்து காலை 8 மணிக்குள்ளும், தேங்காய்ப் பருப்பை தரம் பிரித்து காலை 9 மணிக்குள்ளும் காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வர வேண்டும்.

வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்ட விளை பொருள்களுக்கான உரிய தொகை உடனடியாக வழங்கப்படும். எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 97866-65152 என்ற எண்ணில் தொடா்வு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.