பல்லடம் காமராஜ் நகரில் வீட்டுப் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் நகையைத் திருடிச் சென்றனா்.
பல்லடம் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (39). இவரது மனைவி லட்சுமி (35). இவா்கள், அப்பகுதியில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். கடந்த 28ஆம் தேதி இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை நேரம் வீடு திரும்பியுள்ளனா். அப்போது, வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். பீரோவில் வைத்திருந்த 3.5 பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரொக்கம் ரூ. 10ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.