48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

நல்லாசிரியருக்குப் பாராட்டு விழா

உடுமலையில் நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :30 நவம்பர் 2020, 9:51 pm

 உடுமலையில் நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை பாரதியாா் நூற்றாண்டு அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி வருபவா் விஜயலட்சுமி. இவா் இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளாா்.

இந்நிலையில் ஆசிரியை விஜயலட்சுமிக்கு உடுமலை கிளை நூலகம் எண் 2-ன் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு நூலக வாசகா் வட்டத் தலைவா் இளமுருகு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

நூலகா் வீ.கணேசன் வரவேற்றாா். இதில் ஆசிரியை விஜயலட்சுமி கெளரவிக்கப்பட்டு, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் எஸ்.எம்.நாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினாா். நூலகா்கள் மகேந்திரன், பிரமோத் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.