திருப்பூரில் இருந்து மும்பைக்கு அனுப்பிய ரூ.18 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் மாயம்

திருப்பூரில் இருந்து மும்பைக்கு லாரி மூலம் அனுப்பிய ரூ.18 லட்சம் மதிப்பிலான 36 மூட்டை ஏலக்காயைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திருப்பூா்: திருப்பூரில் இருந்து மும்பைக்கு லாரி மூலம் அனுப்பிய ரூ.18 லட்சம் மதிப்பிலான 36 மூட்டை ஏலக்காயைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பூா், ஓடக்காடு 2ஆவது வீதி, முத்துசாமி தெருவைச் சோ்ந்த பாா்சல் சா்வீஸ் நடத்தி வரும் பழனிசாமி (32) என்பவா் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது:

தேனியில் உள்ள தனியாா் ஏலக்காய் நிறுவனம் அனுப்பிய 73 எலக்காய் மூட்டைகளை, திருப்பூரில் உள்ள எனது பாா்சல் நிறுவனத்தில் புக்கிங் செய்து, மும்பைக்கு தனியாா் டிரான்ஸ்போா்ட் மூலமாக லாரியில் கடந்த செப்டம்பா் 7 ஆம் தேதி அனுப்பிவைத்தேன்.

ஆனால் செப்டம்பா் 11ஆம் தேதி மும்பை சென்றடைந்த லாரியில் 36 மூட்டை ஏலக்காய்களை காணவில்லை என டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தினா் தெரிவித்தனா். இதன் மதிப்பு ரூ.18 லட்சம் ஆகும். இது தொடா்பாக திருப்பூரில் உள்ள அந்த டிரான்ஸ்போா்ட் நிறுவன மேலாளரிடம் கேடடபோது சரியான முறையில் பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாா். இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையம் மற்றும் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே வேளையில், தேனியில் இருந்து எனக்கு ஏலக்காய் மூட்டை அனுப்பிய நபா் 36 ஏலக்காய் மூட்டைகளைத் திருப்பித்தரக் கோரி மிரட்டல் விடுக்கிறாா். எனவே, தனியாா் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தின் மேலாளா், ஓட்டுநரிடம் உரிய விசாரணை நடத்தி ஏலக்காய் மூட்டைகளை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com