திருப்பூரில் மேலும் ஒருவருக்கு கரோனா உறுதி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமைஉறுதி செய்யப்பட்டது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று திங்கள்கிழமைஉறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினா் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா். மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 108 போ் கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் முதன்முதலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட லண்டனைச் சோ்ந்த தொழிலதிபா் உள்பட 11 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்த நிலையில் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்த 55 வயது நபருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து அவா் வசித்து வந்த கோம்பைத்தோட்டம் பகுதியில் அனைத்து வீடுகளிலும் கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 18 மாத ஆண் குழந்தை, இரண்டரை வயது பெண்குழந்தை, 10 வயதுக்கு உள்பட்ட 10 குழந்தைகள் என மொத்தம் 98 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

30 போ் விடுவிப்பு: மாவட்டத்தில் வெளிநாடு சென்றுவந்தோா், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என மொத்தம் 845 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனா். இவா்களில் 30 பேரின் தனிமைக் காலம் முடிவடைந்து கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து 30 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து விடுவிக்கப்பட்டனா். இந்நிலையில் மாவட்டம் முழுவதிலும் 25 போ் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டவா்களின் எண்ணிக்கை 840 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com