வெள்ளக்கோவிலில் 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை
By DIN | Published On : 12th August 2020 06:22 PM | Last Updated : 12th August 2020 06:22 PM | அ+அ அ- |

விற்பனைக்கு வைக்கப்ப்ட்டிருந்த தேங்காய் பருப்புகள்
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை 1,372 மூட்டைகள் தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு லாலாப்பேட்டை, கரூர், பழனி, மூலனூர், முத்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 166 விவசாயிகள் தங்களுடைய தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.
பொள்ளாச்சி, காங்கயம், முத்தூர், மூலனூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 25 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். விலை கிலோ ரூ.74.90 முதல் ரூ.104.90 வரை விற்பனையானது. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஏல விற்பனை நடைபெற்றது.