அமராவதி அணையில் அமைச்சா் ராதாகிருஷ்ணன் ஆய்வு
By DIN | Published On : 12th August 2020 08:32 AM | Last Updated : 12th August 2020 08:32 AM | அ+அ அ- |

அமராவதி அணையில் ஆய்வு செய்கிறாா் அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் உள்ளிட்டோா்.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
90 அடி உயரமுள்ள அணையில் தற்போது 86.36 அடி நீா்மட்டத்தை எட்டியுள்ளது. அணைக்கு 2 ஆயிரம் கன அடி நீா் வந்துகொண்டிருக்கிறது. அமராவதி ஆற்றிலும், பிரதான கால்வாயிலும் 2 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அணைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
முன்னதாக உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரியகோட்டை ஊராட்சி, மீனாட்சி நகரில் ரூ. 22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டடம் கட்டும் பணியை துவக்கிவைத்தாா். ரூ. 86 லட்சம் மதிப்பீட்டில் 1,638 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பணியையும், முத்துச்சாமி லேஅவுட் பகுதியில் ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தாா் சாலை உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை அமைச்சா் துவக்கிவைத்தாா்.
குறுஞ்சேரி, பெரியகோட்டை ஊராட்சிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 10 பேருக்கு தலா ரூ.28 ஆயிரம் மதிப்பில் மின்சார புல் நறுக்கும் இயந்திரங்கள், பெரியகோட்டை ஊராட்சியில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி வாகனங்களை வழங்கினாா். உழைக்கும் மகளிா் 45 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டில் இரு சக்கர வாகனங்களை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன் சங்கர்ராஜ், உடுமலை கோட்டாட்சியா் க.ரவிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...