திருப்பூரில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா் மாநகராட்சி 1ஆவது மண்டலத்தில் 47 வயது ஆண் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த 5 நாள்களுக்கு முன்பாக காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னா், திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். கரோனா நோய்த்தொற்றால் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தது சக ஊழியா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க கோரிக்கை: கரோனாவால் உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்துக்கு அரசு அறிவித்துள்ளபடி ரூ.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சிஐடியூ தொழிற்சங்கத்தினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.