திருமுருகன்பூண்டி பேரூராட்சியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை
By DIN | Published On : 01st December 2020 03:16 AM | Last Updated : 01st December 2020 03:16 AM | அ+அ அ- |

திருமுருகன்பூண்டி பேரூராட்சி, ரிதம் அவென்யூ குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இது குறித்து ரிதம் அவென்யூ குடியிருப்போா் நலச் சங்கத்தினா் பேரூராட்சி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருமுருகன்பூண்டி பேரூராட்சி, 6ஆவது வாா்டுக்கு உள்பட்ட ரிதம் அவென்யூவில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். இப்பகுதிக்கு வளா்ச்சிக் கட்டணமாக ரூ. 6 லட்சத்து 32 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கழிவுநீா் வடிகால், தாா் சாலை வசதிகள் செய்து தரப்படாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...