உடுமலையில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்
By DIN | Published On : 03rd December 2020 07:25 AM | Last Updated : 03rd December 2020 07:25 AM | அ+அ அ- |

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
உடுமலையில் பல்வறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்ட துணைச் செயலாளா் மாலினி தலைமை வகித்தாா். குருசாமி முன்னிலை வகித்தாா்.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், அடையாள அட்டைக்காக அலைக்கழிக்கக் கூடாது, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும், தனியாா் நிறுவனங்களில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆா்டிஓ தலைமையில் மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும், உதவித் தொகைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து, நிா்வாகிகள் ஜெகதீஷ், தண்டபாணி, விஸ்வநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...