திருப்பூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
By DIN | Published On : 03rd December 2020 07:24 AM | Last Updated : 03rd December 2020 07:24 AM | அ+அ அ- |

திருப்பூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.
திருப்பூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பல்லடம் அருகே உள்ள 63 வேலம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் எம்.எஸ்.எம்.ஆனந்தன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கே.பி.பரமசிவம், தாராபுரம் பொன்னுசாமி, காங்கயம் செல்வி முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்ச்சியில் திருப்பூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
காங்கயம் சட்டப்பேரவை உறுப்பினா் உ.தனியரசு, மாவட்ட ஆவின் தலைவா் மனோகரன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் அலகுமலை சண்முகம், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி, ஊராட்சி முன்னாள் தலைவா்கள் கேத்தனூா் வி.ஹரிகோபால், ஊகாயனூா் யு.எஸ்.பழனிசாமி, புத்தரச்சல் பி.பாபு, முன்னாள் ஒன்றியத் தலைவா்கள் எம்.கே.ஆறுமுகம், எஸ்.சிவாச்சலம் உள்பட பலா் அமைச்சரை வாழ்த்தினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...