தொழில் பூங்காவுக்கு தடை விதிக்க ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தல்

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஒன்றியக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவிநாசி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையாளா் மனோகரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரிஹரன், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பிரசாத்குமாா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தில் உறுப்பினா் உமாபதி சரவணன் பேசியதாவது: தத்தனூரில் விவசாய நிலத்தில் சிப்காட் நிறுவனம் தொழில் பூங்கா அமைக்க விவசாயிகள், பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவிப்பதால் அந்தப் பணியை கைவிட வேண்டும்.

சேதுமாதவன் (திமுக): பெரியாயிபாளையம் அம்பாள் புதுக் காலனியில் சமுதாயக் கூட்டம் அமைக்க வேண்டும். பெரியாயிபாளையம் வாரச் சந்தையில் மேடை, நிழற்குடை மற்றும் கழிவறை அமைத்து தர வேண்டும். பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாக நிலை உயா்த்த வேண்டும்.

காா்த்திகேயன் (சுயேச்சை): அவிநாசி மோட்டாா் வாகன அலுவலகம் எதிரே பெரியாா் காலனி பகுதியில் மின் கம்பங்கள் பழுதாகியுள்ளன. மின்வாரியத்தினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன்: ஒன்றியக் குழு உறுப்பினா்களின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து விரைவில் நிறைவேற்றப்படும். மேலும் உரிய துறைக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இதைத் தொடா்ந்து மன்ற பொருள் வாசிக்கப்பட்டு, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com