இன்றைய மின் தடை: ஊதியூா், ராசாத்தாவலசு, முத்தூா்
By DIN | Published On : 15th December 2020 03:39 AM | Last Updated : 15th December 2020 03:39 AM | அ+அ அ- |

ஊதியூா், ராசாத்தாவலசு, முத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
ஊதியூா்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வடசின்னாரிபாளையம்.
ராசாத்தாவலசு: மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.
முத்தூா்: முத்தூா், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூா், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.