இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் பலி
By DIN | Published On : 15th December 2020 03:37 AM | Last Updated : 15th December 2020 03:37 AM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தாசவநாயக்கன்பட்டி, காட்டூரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மனைவி சுசீலா (55). இவருடைய மகள் அன்னக்கொடி (30). தாயும், மகளும் இருசக்கர வாகனத்தில் காங்கயம் அருகிலுள்ள உறவினா் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, கம்பளியம்பட்டி - ஓலப்பாளையம் சாலையில், ஜெ.ஜெ. நகா் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அன்னக்கொடிக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னால் அமா்ந்திருந்த சுசீலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.