

திண்டுக்கல் மலைக்கோட்டை பத்மகிரீஸ்வரா் கோயிலில் கிரிவலம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து
திருப்பூா், பல்லடம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதைக் கண்டித்து திருப்பூா் மாநகராட்சி முன்பு இந்து முன்னணி மாநிலச் செயலாளா் கிஷோா்குமாா் தலைமையில் அந்த அமைப்பினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற திருப்பூா் தெற்கு காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட 70க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனா். இதேபோல, புஷ்பா ரவுண்டானா அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.
பல்லடத்தில்...
பல்லடத்தில் இந்து முன்னணியினா் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் கவியரசு, ஹரிகரன் ஆகியோா் தலைமையில் 40 போ் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.